இந்தியா

ஒரு ஆண்டிற்கு ரூ.60 ஆயிரம் ஓய்வூதியம் – அடல் திட்டத்தின் சிறப்பம்சங்கள்!!

ஒருவர் தனது முதுமை காலத்துக்கு தேவையான பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என விரும்பினால் அவர்களுக்கான சிறந்த திட்டமாக அடல் பென்சன் யோஜனா செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மேலும் சில அம்சங்கள் தற்போது விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

முதுமை காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருக்கிறது. அந்த வகையில் பிற்காலத்துக்கு தேவையான நிதியை சேமித்து வைப்பதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் படி வருங்காலத்துக்கான பணத்தை சேமித்து வைக்க விரும்புபவர்களுக்கு அடல் பென்சன் யோஜனா திட்டம் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. ஓய்வூதிய திட்டமாக செயல்பட்டு வரும் இத்திட்டத்தில் பயனடைய 18 வயது முதல் 40 வயது வரையுள்ள அனைவரும் தகுதி உடையவர்கள் ஆவர்.

அதாவது மத்திய அரசின் வருமான வரி வரம்பில் இல்லாதவர்களுக்கு இந்த ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் வருமான வரி செலுத்தாதவர்களின் கணக்குகளுக்கு மத்திய அரசு 50% அல்லது வருடத்திற்கு 1000 ரூபாயை இந்த திட்டத்தில் பங்களிக்கிறது. ஆனால் இவ்வகை பங்களிப்பு மாத ஊதியதாரர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது கவனிக்க வேண்டியது. இத்திட்டத்தில் பயனடைய ஒவ்வொருவரும் மாதந்தோறும் ரூ.1000 ஓய்வூதியம் பெறுவதற்காக ரூ.42 செலுத்த வேண்டும்.

அதே போல ரூ.2000 மாத ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.84 ரூபாயும், மாதம் ரூ.3,000 பெறுவதற்கு ரூ.126 யும், மாதம் ரூ.4,000 பெறுவதற்கு ரூ.168 மும், மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் பெறுவதற்கு ரூ. 210 உள்ளிட்ட தொகைகளை செலுத்த வேண்டும். சுருங்க கூறின் ஒரு மாதத்திற்கு ரூ.5,000 என்ற கணக்கில் ஒரு ஆண்டுக்கு ரூ.60,000 ஓய்வூதியம் பெற, ஒரு நாளைக்கு ரூ.7 என்ற அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் ரூ. 210 ஐ முதலீடு செய்ய வேண்டும்.

அந்த வகையில் நாம் பங்களிப்பு தொகையை முறையாக செலுத்தாவிட்டால், அடுத்த 6 மாதங்களுக்கு பிறகு உங்கள் கணக்கு முடக்கப்படும். பின்னர் 12 மாதங்கள் கழித்து உங்கள் கணக்கு செயலிழக்கும். தொடர்ந்து ஒரு வருடம் கழித்தும் நீங்கள் பணம் செலுத்தவில்லை என்றால், இந்த கணக்கு 2 வருடங்களுக்கு பின்னாக முற்றிலுமாக மூடப்படும். அதனால் இத்திட்டத்தின் வாடிக்கையாளர்கள் குறிப்பிடப்பட்ட பங்களிப்பு தொகையை மறவாமல் செலுத்துவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: