உலகம்

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய முயற்சி!

கோவிட் தொற்றுக்குள்ளாகி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்களிடத்தில் மூன்று மருந்துகளை வழங்கி சிகிச்சை அளிக்கும் முறையை உலக சுகாதார நிறுவனம் முன்னெடுக்க உள்ளது. தனது பரிசோதனைகளை 52 உலக நாடுகளில் செயல்படுத்த உள்ளது.

மலேரியாவுக்கான Artesunate, சில வகையான புற்றுநோய்களுக்கான imatinib, மற்றும் நாட்பட்ட நோய்களுக்கான infliximab ஆகிய மருந்துகளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவிட் நோயாளர்களிடத்தில் பரிசோதிக்கப்பட உள்ளது. மேலும் இது உயிராபத்து நிலையை குறைக்கும் என நம்பப்படுகின்றது.

கோவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சரியான மருத்துவத்தை கண்டுபிடிப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானத்திற்கு உலக சுகாதார நிறுவனம் செல்கின்றது. இந்த நடவடிக்கை குறித்த மூன்று மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நன்கொடையாக மருந்துகளை வழங்கியுள்ளன.

இதன் முதற்கட்ட பரிசோதனையை கடந்த வருடம் உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் தற்போது மேற்கொள்ளும் புதிய முயற்சியில் 52 நாடுகளைச் சேர்ந்த 600 மருத்துவமனையில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

இதற்கு முன்னர் ரெமிட்ஸ்விர், ஹைட்ரொக்சிக்ளொரொகுயின், லொப்பினவிர், இன்டர்பெரன் போன்ற நான்கு மருந்துகளை கோவிட் 19 தொற்றுக்குள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களிடத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதன் பக்கவிளைவு மிக குறைவான அளவு அல்லது பக்கவிளைவே இல்லாமல் இருந்துள்ளது.

புதிய வகை வைரஸால் நாடுகள் போராடி வரும் நிலையில் இதனை உலக சுகாதார நிறுவனம் மேலும் அதிகப்படுத்தவும் உள்ளது. இந்த நிலையில் புதிய இந்த முயற்சியில் கனடா, பின்லாந்து, இந்தோனேஷியா, மலேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் பங்கேற்க உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: