உலகம்

பிரான்சில் 13 வயதுடைய இரட்டை குழந்தைகளை கொலை செய்த தாய்! காரணம் தெரியாமல் தவிக்கும் போலீசார்

பிரான்சில் தாய் ஒருவர் தன்னுடைய 13 வயதுடைய இரட்டை குழந்தைகளை படுகொலை செய்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Somme மாவட்டத்தில் கடந்தவார வியாழக்கிழமை நாற்பது வயது மதிக்கத்தக்க தாய் ஒருவர், தன்னுடைய 13 வயதுடைய இரட்டை குழந்தைகளை படுகொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 14-ஆம் தேதி குறித்த தாயார் கொலைக் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கைதான பெண்மணி மனநல பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதால், இக்கொலைகளுக்கான காரணம் குறித்து எதுவும் அறியமுடியவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளை கொன்றுவிட்டு, தமது உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற தாயார், தாம் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டதாக கூறிய பின்னரே, குழந்தைகளின் உயிரிழந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

loading...
Back to top button
error: Content is protected !!