உலகம்

‘UAE-ல வொர்க் பண்றவங்களுக்கு ஒரு குட் நியூஸ்..’ – UAE பிரதமர் வெளியிட்ட தகவல்..

UAE-யில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை சம்பந்தமாக மிகப்பெரிய சட்டத்திருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மட்டுமல்லாமல் எனைய உலகநாடுகளைச் சேர்ந்த பலர் பல வருடங்களாக ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு தேவையான சலுகைகள் வழக்கப்படுகிறதா என்றால் அது கேள்விக்குறியே. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் சட்டப்படி, எவ்வளவு காலம் வேலை செய்தாலும் வெளிநாட்டவர்க்கு குடியுரிமை வழங்கப்படாது

இந்நிலையில் வரலாற்றிலேயே முதல்முறையாக வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு சட்டத்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. ஆனால் இவை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குடியுரிமை தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தும் ட்விட்டரில் சில தகவல்களை ட்விட் செய்துள்ளார்.

அதாவது, ‘முதலீட்டாளர்கள், தனித் திறமை வாய்ந்தவர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு குடியுரிமை வழங்க தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். இந்த புதிய முயற்சியின் கீழ், நமது வளர்ச்சிப் பாதைக்கு பங்களிக்கக்கூடிய திறமை வாய்ந்தவர்களை ஈர்க்க முடியும்’ எனக் கூறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியுரிமை பெறுவோருக்கு புதிய UAE பாஸ்போர்ட் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!