இந்தியா

சிக்கன் பிரியாணி சாப்பிட்ட அடுத்த சில நிமிடங்களில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த 23 வயது இளைஞன்!!

இந்தியாவில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட சில நிமிடங்களில் 23 வயது இளைஞர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் நரசாபேட்டை சேர்ந்தவர் போடா பிரசாத் (23). இவர் நேற்று அங்குள்ள ஹொட்டலில் சென்று சிக்கன் பிரியாணி சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்து வெளியில் வந்த போது பிரசாத் தொடர்ந்து இரத்த வாந்தி எடுத்தார்.

வாந்தி எடுத்து முடித்தவுடன் அப்படியே அதே இடத்தில் பிரசாத் உயிரிழந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பிரசாத் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உள்ளூர் நகராட்சி அதிகாரிகள் பிரசாத் சாப்பிட்ட உணவு மாதிரிகளை ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர்.

இதனிடையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு பிரசாத் இறப்புக்கான காரணம் தெரியவரும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  பிரதமர் மோடி தலைமையில் இன்று முக்கிய கூட்டம்..!
Back to top button
error: