உலகம்

10 நாட்களில் 13 திகில் படம் பார்த்தால் ரூ.95,000 பரிசு!

அமெரிக்காவை சேர்ந்த பைனான்ஸ்பஸ் என்ற நிதி நிறுவனம் அக்டோபர் மாதத்தில் 10 நாட்களில் 13 பயங்கரமான திகில் திரைப்படங்களை பார்ப்பவருக்கு 95 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கூடிய திகில் படங்கள் அனைத்தும் பார்வையாளர்களை அதிகம் பாதிக்கப்படுகிறதா? அல்லது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கும் படம் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா? என்பதை கண்டுபிடிப்பதற்காக ஆய்வு செய்யப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் நபருக்கு அவரின் இதயத்துடிப்பைக் கண்காணிக்கும் விதமாக பிட்பிட்டை பயன்படுத்தப்படும். அதன் மூலமாக அவரின் இதயத் துடிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
போட்டியாளர் 10 நாட்களில் 13 திகில் படங்களை பார்ப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிதிநிறுவனம் அறிவித்திருக்கும் இந்த சொகுசு வேலைக்கு அவர்கள் பார்க்கச் சொல்லும் 13 படங்களின் பட்டியலை கீழே காணுங்கள்.

Saw

Amityville Horror

A quiet place

A quiet place part 2

Candyman

Insidious

the Blair witch project

sinister

get out

the purge

Halloween

paranormal activity

Annabelle

இந்தப் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த 18வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
செப்டம்பர் 26ம் தேதிக்குள் இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  உலகளவில் கொரோனாவால் 22.10 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு!
Back to top button
error: