இந்தியா

EPFO சந்தாதாரர்களுக்கு 8.5 சதவீத வட்டி டெபாசிட் – வெளியான தகவல்!!

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 2020-21-ம் நிதி ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் இம்மாத இறுதிக்குள் ஊழியர்கள் கணக்கில் சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மாத சம்பளம் வாங்கும் அனைத்து தொழிலாளர்களும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக சேர்ந்த பின்னர், அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து மாதம்தோறும் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அந்த தொகையினை பின்னர் ஏதேனும் அவசரம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் என்பதால், ஊழியர்களுக்கு இத்தொகை மிகப்பெரிய சேமிப்பாக உள்ளது.

இந்நிலையில் ஊழியர்கள் தங்களது ஓய்வுக் காலம் வரை இந்த தொகையை எடுக்காமல் இருந்தால் அவர்களுக்கு மொத்த தொகைக்கு வட்டி வழங்கப்படும். ஆனால் கொரோனா காரணமாக பலர் இந்த தொகையை எடுத்துள்ளனர். இதனால் 2020-21 ஆம் நிதி ஆண்டுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை. அதன்படி 2019-20 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வட்டி விகிதம் 8.50 ஆக குறைக்கப்பட்டது.

இந்த வட்டி விகிதமானது முந்தைய 7 ஆண்டுகளில் வழங்கப்பட்ட வட்டி விகிதத்தை விட குறைவாகும். மேலும் பலர் கொரோனா காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க தொழிலாளர்கள் தங்கள் சேமிப்பு தொகையிலிருந்து திரும்ப செலுத்த வேண்டியிராத தொகையை முன்பணமாக பெற அனுமதி அளிக்கப்பட்டது. சேமிப்பில் இருந்து 75 சதவிகித அளவு பணத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இபிஎஃப்ஓ வில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது 20 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிதாக சேர்ந்தவர்கள் எண்ணிக்கை 7.56 லட்சம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: