தமிழ்நாடு

பள்ளிகளில் 7,979 தற்காலிக ஆசிரியர் பணி – 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!!

தமிழகத்தில் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக சுமார் 7,979 ஆசிரியர்கள் தற்காலிகமாக பணி நியனமம் செய்யப்பட்டிருந்தனர். இந்த பணி நியமனத்தை இன்னும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு, 1:40 என்ற ஆசிரியர் மாணவர் விகிதப்படி சுமார் 7,979 ஆசிரியர்கள் கூடுதலாக பணி நியமனம் செய்யப்பட்டனர். இந்த பணியிடங்களுக்கான கூடுதல் செலவினங்களை அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த தற்காலிக ஆசிரியர் பணியில் இருந்து வரும் பட்டதாரிகளுக்கு கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது.

இதை தொடர்ந்து இப்பணியில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 7,979 ஆசிரியர் பணியிடங்களுக்கான தேவைகள் இருப்பதால் இந்த பணியிடங்களை 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை தொடர் நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறையில் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 7,979 ஆசிரியர்களுக்கும் இதுவரை கொடுக்கப்பட்டு வந்த ஊதியம் (ரூ.36,400 முதல் ரூ.1,15,700) குறித்து நிதித்துறையின் மறு ஆய்வில் முடிவு எடுக்கப்படும் வரை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த செலவினங்கள் அனைத்தையும் 2202 பொதுக்கல்வி, 02 இடைநிலைக்கல்வி, 109 அரசு இடைநிலைப் பள்ளிகள், மாநில செலவினங்கள், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுத்தல் ஆகிய தலைப்பின் கீழ் பங்கு வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பும் போது புத்தாக்கம் செய்து நிரப்ப வேண்டும் எனவும், இது குறித்து உரிய ஆய்வுகளை மேற்கொண்டு காலிப்பணியிடங்கள் குறித்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலர் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  அரசு வழங்கும் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: