தமிழ்நாடு

அரசு வேலைக்காக காத்திருக்கும் 71.55 லட்சம் பேர் – வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிக்கை!!

தமிழகத்தில் 71.55 லட்சம் பேர் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு வேலை பெற அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது அவசியம். மேலும் அவ்வவ்போது கல்வி தகுதிகளையும் அப்டேட் செய்ய வேண்டும். இந்த வேலைவாய்ப்பு பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பு செய்ய வேண்டும். இதனை இணையதளம் வாயிலாகவும் அல்லது நேரடியாகவும் புதுப்பிப்பு செய்யலாம். தமிழகத்தில் 2017, 2018 ,2019, 2020 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு அரசு 3 மாத கால அவகாசம் அளித்தது. இதை பயன்படுத்தி ஏராளமானோர் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் அரசு சார்பாக வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வேலை கிடைக்காதவர்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் 31.8.2021 நிலவரப்படி 71.55 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.

இதில், 24 முதல் 35 வயதுக்கு உட்பட்ட பதிவுதாரர்களின் எண்ணிக்கை 26,59,276 ஆகும். மேலும் 36 வயது முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 13,4,299 பேர், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு பதிவு செய்திருப்பவர்கள் 1,81,612 இளங்கலை பட்டப் படிப்புடன் பி.எட்., முடித்து வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்திருப்பவர் 3,50,455 பேர் ஆவர். மேற்கண்ட பதிவுதாரர்களின் எண்ணிக்கையை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் வெளியிட்டுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு – பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் ரத்து!!
Back to top button
error: