தமிழ்நாடு

சென்னையில் 70 மினிபஸ் சேவைகள் நிறுத்தம்!

பேருந்து வசதி குறைவாக உள்ள பகுதிகளில் திமுகவின் ஆட்சிக்காலத்தில் மினிபஸ் தொடங்கப்பட்டு இயக்கப்பட்டு வந்தனர். சென்னை மாநகரிலும் மினிபஸ் கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் அக்டோபர் 22, 2013 அன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிற்றுந்து – ஸ்மால் பஸ் என்கிற பெயரில் சென்னையில் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் சென்னையில் இயக்கப்பட்டு வந்த மினிபஸ் சேவையில் 70 பஸ்கள் வரை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நகரின் உள் பகுதிகளில் குறுகலான தெருக்கள் இருக்கும் பகுதிகளில் இதுபோல 200 பஸ்கள் வரை இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கொரோனாவிற்கு பிறகு மக்களிடம் போக்குவரத்து பயன்பாடும் குறைந்துள்ள நிலையில் முன்பு மினிபஸ்களுக்குக் கிடைத்த வரவேற்பு தற்போது இல்லை என தெரிவிக்கிறார்கள்.

இதனையொட்டி பயணிகள் ஆதரவு குறைவாக உள்ள வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த 70 மினி பஸ்களை நிறுத்தியுள்ளது சென்னை மாநகராட்சி. பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட பின்னரும் நிலைமை சரியான பின்னரும் மீண்டும் முழு அளவில் இந்த பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

Back to top button
error: Content is protected !!