தமிழ்நாடு

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு – 70 லட்சம் பேர் காத்திருப்பு, ஷாக் ரிப்போர்ட்!!

தமிழகத்தில் அரசுப் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இதுவரை வேலை கிடைக்காமல் சுமார் 70 லட்சம் பேர் காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தகவல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக பல குடும்பங்களில் பொருளாதார நிதி நெருக்கடி, வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் எதிர்பாராத விதமாக உருவான கொரோனா பேரலை காரணமாக தொழில்துறை நிறுவனங்கள் முடக்கப்பட்டதால் பெரிய நிறுவனங்களுக்கும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. இவற்றை ஈடு செய்யும் பொருட்டு பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

தற்போது கொரோனா சூழல் மாறுபட்டு வருவதால் பலரது வேலைவாய்ப்பும் மீண்டு வர துவங்கியுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் அரசு பணிக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதாக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகம் தகவல் அளித்துள்ளது. அதாவது கடந்த ஜூலை மாத நிலவரப்படி, அரசு பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 70,30,345 பேராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த மொத்த எண்ணிக்கையில் சுமார் 32,93,401 ஆண்கள், 37,36,687 பெண்கள் மற்றும் 257 பேர் மூன்றாம் பாலினத்தவரும் ஆவர். இவற்றில் 18 – 23 வயதுக்குட்பட்ட 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களும், 24 – 35 வயதுக்குட்பட்டவர்கள் 26,27,948 பேரும், 36 – 57 வயதுக்குட்பட்டவர்கள் 12,77, 839 பேரும், 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11,213 பேரும் உள்ளனர். இதில் மாற்றுத்திறனாளிகள் மட்டும் 1,37,77 பேர் அரசு பணிக்காக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: