உ.பி.யில் சாலை விபத்து.. பரிதாபமாக 7 பேர் பலி..

உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் குண்டர்கி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மொராதாபாத் மற்றும் ஆக்ரா நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், பேருந்தும், லாரி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், காயமடைந்த நபர்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.