இந்தியா

உ.பியில் கார் மீது எண்ணெய் லாரி மோதி விபத்து.. பரிதாபமாக 7 பேர் பலி..!

உத்தர பிரதேசத்தின் யமுனா விரைவுசாலையில் பயணித்த கார் ஒன்றும், எண்ணெய் லாரி ஒன்றும் திடீரென மோதி விபத்திற்குள்ளானது. இதில் எண்ணெய் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்களில் 2 பெண்கள் உள்பட 7 பேர் சிக்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Back to top button
error: Content is protected !!