தமிழ்நாடுமாவட்டம்

7.5 இட ஒதுக்கீடு.. திருச்சியைச் சேர்ந்த 14 பேருக்கு மெடிக்கல் சீட்..

தமிழக அரசு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதன் அடிப்படையில், மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகள் உள்ளிட்ட திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 14 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரியில் பிற மாவட்ட அரசு பள்ளிகளில் படித்த 10 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். சேலம் சிவாம்பிகா, கரூர் சுஷ்மிதா, கள்ளக்குறிச்சி ஜெயப்பிரியா, பெரம்பலூர் மணிகண்டன், ராதா, அபிதா, கிருஷ்ணகிரி பெரோஸ், கூடலூர் அகல்யாஸ்ரீ, தஞ்சை சஹானா, திண்டுக்கல் அர்ச்சனா ஆகிய 10 பேர் மருத்துவ படிப்புக்காக சேர்ந்துள்ளனர். மருத்துவக் கல்லூரி டீன் வனிதா, அவர்களை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.

loading...
Back to top button
error: Content is protected !!