இந்திய நாட்டில் மின்சார உற்பத்தி செய்யப்படும் போது 70 சதவீதம் நிலக்கரி தேவைப்படுகிறது. மேலும் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் மின் நுகர்வின் அளவும் உயர்ந்துள்ளது. அதனால் மின்சார தேவையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்திய மின் உலைகளில் உள்ள நிலக்கரி இருப்பு இந்த மாத தொடக்கத்திலேயே ஏறக்குறைய 17% சரிவடைந்துள்ளது. மேலும் தற்போது தேவைப்படும் நிலக்கரியில் 3ல் ஒரு பங்கு மட்டுமே கையிருப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தற்போது நடைபெற்று வரும் ரஷியா உக்ரைன் போர் காரணமாக எரிபொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் நாட்டின் தலைநகரில் பொதுவாக 21 நாட்களாவது நிலக்கரி கையிருப்பு வைத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது ஒரு நாளுக்கும் குறைவான நிலக்கரியே மின் உலைகளில் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக மெட்ரோ மற்றும் அரசு மருத்துவமனை சேவைகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. இதே போன்று பல மாநிலங்களில் நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளது.
அதனால் நிலக்கரியின் கையிருப்பை அதிகப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாட்டில் சரக்கு ரயில்கள் மூலமாக நாள் ஒன்றுக்கு 400க்கும் அதிகமான பெட்டிகள் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட்டு வருகிறது. அதனால் சரக்கு ரயிலின் வேகத்தை அதிகப்படுத்த 670 பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்வதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நிலக்கரியின் இருப்பு நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் போது மீண்டும் ரயில் சேவைகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh