வேலைவாய்ப்பு

IDBI வங்கியில் 650 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

IDBI வங்கி ஆனது அங்கு காலியாக உள்ள Assistant Manager Grade ‘A’ பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பிட PGDBF என்ற Course நடத்த உள்ளதாக புதிய அறிவிப்பினை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டு இருந்தது. அதில் இப்பணிகளுக்கு என 650 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • பதிவாளர்கள் 01.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 28 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • இந்த ஆன்லைன் தேர்வுகள் வரும் 04.09.2021 அன்று நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
  • அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களும் ரூ.1,000/- கட்டணமாக செலுத்த வேண்டும்ம SC / ST / PwD விண்ணப்பதாரர்கள் ரூ.200/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 22.08.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisment-PGDBF-2021-22.pdf

Apply Online – https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தென் மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு – 8/ 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!
Back to top button
error: