தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தடையின்றி மின்சாரம் உற்பத்தி செய்ய, 60 ஆயிரம் டன் நிலக்கரி, விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 அலகுகள் மூலம் ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று 3 அலகுகள் நிறுத்தப்பட்டதால் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், அவசர தேவைக்காக விசாகப்பட்டினத்திலிருந்து 60 ஆயிரம் டன் நிலக்கரி, கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டது. ஒரு அலகில் மின் உற்பத்தி செய்ய 7 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும். நாளொன்றுக்கு 5 அலகுகளிலும் மின் உற்பத்தி செய்ய 35 ஆயிரம் டன் வரை நிலக்கரி தேவைப்படும். எனவே, தற்போது கொண்டு வரப்பட்டுள்ள 60 ஆயிரம் டன் நிலக்கரி, 2 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh