மாவட்டம்

புதுக்கோட்டை அருகே குளத்தில் ‍குளிக்கச் சென்ற 6 சிறுவர்கள் உயிரிழப்பு..!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த சொக்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்த 6 சிறுவர்கள் அருகில் உள்ள அங்காள பரமேஸ்வரி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்‍கச் சென்றுள்ளனர்.

அப்போது குளத்தில் ஆழம் அதிகம் என தெரியாமல் குளித்துக்‍ கொண்டிருந்த சிறுவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 2 பேர் உயிர் தப்பிய நிலையில், வெள்ளாளவிடுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்‍கு கொண்டு செல்லும் வழியில் அந்த 2 சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: