இந்தியாஆரோக்கியம்

இந்தியாவில் 59 சதவீத ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் – ஆய்வில் தெரியவந்த தகவல்!!

இந்தியாவில் 59 சதவீத ஊழியர்கள், மன அழுத்தத்துடனேயே அன்றாட வாழ்க்‍கையை கடந்து செல்கிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த மதிப்பீடு உலகில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத அளவில் அதிக அளவாக கணக்‍கிடப்பட்டுள்ளது.

Marsh India என்ற தனியார் நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில், நாட்டில் 59 சதவீத ஊழியர்கள் மன அழுத்தத்துடன் அன்றாட வாழ்க்‍கை முறையை கடந்து செல்வதாகவும், 5-ல் 3 ஊழியர்கள் மன அழுத்தத்தில் பாதிக்‍கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. உலக அளவில் 50 சதவீத பணியாளர்களும், ஆசிய அளவில் 51 சதவீத பணியாளர்களும் இந்த பாதிப்புக்‍கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் பெருந்தொற்று காலத்தில், 27 சதவீத பணியாளர்கள், ஒட்டுமொத்தமாக எதிர்மறை தாக்‍கத்தை சந்தித்துள்ளனர். உலகளவில் இது 33 சதவீதமாகவும், ஆசிய அளவில் 28 சதவீதமாகவும் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா காலத்தின்போது 21 சதவீதத்திற்கும் குறைவான முதலாளிகள், பணியாளர்களின் நல்வாழ்வில் அக்‍கறை காட்டியுள்ளதாகவும், 44 சதவீத முதலாளிகள் பணியாளர்கள் மீது எதிர்மறை தாக்‍கத்தையே ஏற்படுத்தியதாகவும் ஆய்வில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்‍கு முன்னதாக 58 சதவீதமாக இருந்த பணியாளர்கள் மீதான முதலாளிகளின் அக்‍கறை, பெருந்தொற்று காலத்தில் 53 சதவீதமாக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், எதனையும் பொருட்படுத்தாமல், பெருந்தொற்று காலத்திலும் பணியாளர்கள், தங்களின் நிறுவனத்திற்கு உறுதுணையாக முழு அளவில் பணியாற்றி வந்ததாக ஆய்வில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  கனரா வங்கி வாடிக்கையாளர்களின் FD வட்டி விகிதங்களில் மாற்றம்!!!
Back to top button
error: