தமிழ்நாடு

3 ஆண்டுகளில் 52 பேர் பலி.. பீட்டா மீண்டும் எதிர்ப்பு..

கொரோனா விதிமுறைகளை கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தக்கூடாது என்று பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பாக பீட்டா அமைப்பின் இந்திய இணை ஆராய்ச்சியாளர் டாக்டர் அங்கிதா பாண்டே வெளியிட்ட அறிக்கையில்… கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அளித்த அனுமதியை திரும்பப்பெற வேண்டும் எனக்கூறி 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளதாகவும், அதே கோரிக்கைகளை முன்வைத்து தாங்களும் ஜல்லிக்கட்டு போட்டி ரத்து செய்ய கோரி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,அங்கிதா கூறுகையில் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியை சட்டபூர்வமாக்கியதில் இருந்து இதுவரை குறைந்தது 22 காளைகள், 52 மனிதர்கள் இறந்துள்ளனர். மாநில முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வுகளில் 3,500 மனிதர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மாநிலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி அனுமதிக்கப்பட்டால் கொரோனா பரவல் காரணமாக மனித இறப்பு அதிகரிக்க கூடும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!