வேலைவாய்ப்பு

ரூ.1,05,000/- ஊதியத்தில் IOCL நிறுவனத்தில் 514 காலிப்பணியிடங்கள்!!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள Junior Engineering Assistant, Junior Material Assistant, Junior Quality Control Analyst and Junior Nursing Assistant பணிகளுக்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தகுதி படைத்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், அதற்கான விவரங்களை கீழே தொகுத்துள்ளோம். விண்ணப்பிக்க விழையும் விருப்பமுள்ளவர்கள் அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் – IOCL
பணியின் பெயர் – Junior Engineering Assistant, Junior Material Assistant, Junior Quality Control Analyst and Junior Nursing Assistant
பணியிடங்கள் – 514
கடைசி தேதி – 21.09.2021 – 12.10.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வேலைவாய்ப்பு :

Junior Engineering Assistant, Junior Material Assistant, Junior Quality Control Analyst and Junior Nursing Assistant பணிகளுக்கான 514 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் 30.09.2021 தேதியில் குரைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 26 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

கல்வித்தகுதி :

  • 10ம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Diploma or Degree of B.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் ஒரு வருடமாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

  • விண்ணப்பத்தாரர்கள் Written Test and a Skill/ Proficiency/ Physical Test (SPPT) மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • எழுத்துத்தேர்வு ஆனது வரும் 24-10-2021 (Tentative) அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் :

  • General, EWS and OBC (NCL) விண்ணப்பதாரர்கள் – ரூ.150/-
  • SC/ ST/ PwBD/ ExSM விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 21.09.2021 அன்று முதல் 12.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் நகலினை 23.10.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Apply Online – https://10.18.72.19/iocrefrecruit/main_special_sep21.aspx

Official PDF Notification – https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/80126f4c342348d48aa959a2418baeb9.pdf

Official Site – https://iocl.com/latest-job-opening

இதையும் படிங்க:  மாதம் ரூ.58,100/- வரை சம்பளம்.. தலைமை செயலகத்தில் வேலைவாய்ப்பு!

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: