ஆன்மீகம்

பெண்கள் செய்யவே கூடாத 5 விஷயங்கள்? சாஸ்திரம் சொல்லும் காரணங்கள்..!

நாம் எவ்வளவு தான் ஆணும் பெண்ணும் சமம் என்று கூறினாலும் சில விஷயங்களை ஆண்கள் செய்யக்கூடாது என்றும், சில விஷயங்களை பெண்கள் செய்யக்கூடாது என்பதும் ஆன்மீக ரீதியாக தொடர்கின்ற சாஸ்திரங்கள்.

இந்த சாஸ்திரங்களின் அடிப்படையில் பெண்கள் சில விஷயங்களை செய்வதை தவிர்க்க வேண்டும் என்பது நியதி. இவற்றை செய்வதால் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பாதிப்புகள் உண்டாகும் என்கிறது சாஸ்திரம்.

அப்படியான ஐந்து விஷயங்களை பற்றிய தகவல்களை தான் இப்பதிவில் பார்க்க இருக்கிறோம். பொதுவாக ஆண், பெண் என்கிற எந்த பாகுபாடும் இல்லாமல் அர்த்த நாரீஸ்வரராக நிற்கும் சிவபெருமானை வேண்டுபவர்களுக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஒருவரது வீட்டில் ஆணும் பெண்ணும் எந்த அளவிற்கு மரியாதையுடன் நடத்துகிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுடைய குலம் செல்வ செழிப்புடன் வாழும் என்பது நம்பிக்கை.

பெண் தானே என்று அலட்சியமாக நினைத்து அவர்களை துன்புறுத்துபவர்கள் எப்போதும் முன்னேற்றத்தை காண முடியாது. நீங்கள் பெண்ணுக்குக் கொடுக்கும் மரியாதையில் தான் உங்களுடைய எதிர்காலமும் அடங்கியுள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.

சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவமில்லை என்ற கூற்றும் பொய்யில்லை. அதே சமயத்தில் சாஸ்திரங்களின் பொழுது சில விதி விலக்குகளும் பொய் இல்லை என்றே கூற வேண்டும். வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது எப்படி ஒரு பெண்ணின் கையால் ஏற்றுவது சிறந்தது என சாஸ்திரம் கூறுகிறது? அதே போல இந்த விஷயங்களை பெண்கள் செய்யக்கூடாது என்பதும் சாஸ்திர நியதி.

வீட்டில் ஆண் விளக்கு ஏற்றுவதை சாஸ்திரம் தவறு என்று கூறுகிறது. இது சாஸ்திரம் பெண்களுக்கு கொடுத்திருக்கும் கௌரவ பதவி என்றே கூறலாம்.

1. கர்ப்பமான பெண்கள் விநாயகப் பெருமானுக்கு எப்பொழுதும் சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது. வேண்டுதல்கள் இருந்தாலும் கருத்தரித்த பின் சிதறு தேங்காய் உடைப்பது சாஸ்திர ரீதியாக தவறாகும். உங்கள் கணவன் கையால் கொடுத்து உடைக்க செய்யலாம்.

2. திருஷ்டி சுத்தி போடும் பொழுது பூசணிக்காய் பயன்படுத்துபவர்கள் இதை ஆண்கள் தான் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பூசணிக்காயை பெண்களின் கையால் திருஷ்டி கழிக்க கூடாது என்பதும் சாஸ்திர உண்மை.

3. அது போல் திருமணமான பெண்களுக்கு திருமாங்கல்யம் எவ்வளவு முக்கியமானதோ! அதே அளவிற்கு மெட்டியும் மிக முக்கியமான ஒன்று. காலில் மெட்டி இல்லாமல் திருமணமான பெண்கள் பாதத்தைத் தரையில் வைத்து நடக்கக் கூடாது.

4. பெண்கள் தூங்கும் பொழுது நேராகவோ அல்லது ஒரு பக்கமாக ஒருக்களித்து தான் படுக்க வேண்டும். மார்பு தரையில் படும் படி எப்போதும் பெண்கள் படுக்கக் கூடாது. இதன் காரணமாகவே ஆலயங்களில் ஆண்களை முழு உடலும் பூமியில் படும் படி விழுந்து வணங்க வேண்டும் என்றும், பெண்களை மண்டியிட்டு மார்பு பூமியில் படாதபடி விழுந்து வணங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

5. திருமணமான பெண்கள் கணவனுக்கு தெரியாமல் எந்த ஒரு தர்மத்தையும் செய்யக்கூடாது. தர்மம் செய்வது புண்ணியத்தை சேர்க்கும் என்றாலும் அதனை கணவனுக்கு தெரியாமல் செய்வது பாவத்தை சேர்க்கும் என்பதும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் பெண்களின் அழுகுரல் அதிகமாக கேட்டால் அந்த வீட்டில் செல்வம் தங்குவதில்லை. பெண்களை எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்திருந்தால் அந்த வீட்டில் செல்வ செழிப்பு நிலைத்து நிற்கும்.

அதே சமயத்தில் மேற்கூறிய இந்த 5 விஷயங்களை பெண்கள் தவிர்ப்பதும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் மிகவும் நல்லது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: