இந்தியா

இந்தியாவில் அக்டோபர் மாதத்திற்குள் மேலும் 5 கொரோனா தடுப்பூசிகள் அறிமுகம்.. மத்திய சுகாதாரத்துறை தகவல்..!

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்திற்குள் மேலும் 5 கொரோனா தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுகள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வர இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஸ்புட்னிக் வி, ஜான்சன் அண்டு ஜான்சன், நோவோவேக்ஸ், இன்ட்டிரானாசல் உள்ளிட்ட தடுப்பூசிகளை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த பத்து நாட்களுக்குள் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  இந்தியாவில் 9 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு சாதனை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: