இந்தியா

பிகானர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து.. 5 பேர் பலி, 40 பேர் காயம்..!

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் உள்ள மைங்குடியில் பிகானர் எக்ஸ்பிரஸ் (15633) தடம் புரண்டது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 40 பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த ரயில் ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, மைனகுரியை கடக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ரயில்வே போலீஸ் நிர்வாகம் உள்ளிட்ட மாவட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ரயிலின் பெட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று மாலை 5.15 மணியளவில் நடந்தேறியுள்ளது. பிகானர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டதில் பயணிகள் நிரம்பிய 4 பெட்டிகள் முற்றிலும் கவிழ்ந்துள்ளன. இந்த பெட்டிகளில் ஒன்று தண்ணீரில் விழுந்ததால், அதில் சிக்கித் தவித்த பயணிகள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: