தமிழ்நாடு

அரசு சார்பில் பெண்களுக்கு 100% மானியத்தில் 5 ஆடுகள் – அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு அரசு சார்பில் 100 சதவீத மானியத்தில் 5 ஆடுகள் வழங்கப்படும் என கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதற்கான விவாதமும் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து தினசரி துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கல்வித்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், சனிக்கிழமை கால்நடைத் துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி,

  • சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை அறிய ரூ.3.50 கோடியில் 25 கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்படும்.
  • கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 30,800 ஏழை பெண்களுக்கு தலா 5 செம்மறி, வெள்ளாடுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ.75.63 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • பசுந்தீவன இருப்பை அதிகரிக்க ரூ.4.82 லட்சம் மதிப்பில் 16 தீவன வங்கிகள் நிறுவப்படும்.
  • செல்லப்பிராணிகளுக்கான பன்னோக்கு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் சென்னை நந்தனத்தில் நிறுவப்படும். இதற்கு ரூ.7.99 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • கால்நடைகளின் நலன்களைப் பேணவும் தரமான சிகிச்சை வழங்கவும் ரூ.7.76 கோடி ஒதுக்கீட்டில் 7,760 கால்நடை சுகாதார முகாம்கள் நடத்தப்படும்.
  • அரியலூர், கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் உள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவுகளுக்கு ரூ.3.46 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: