தமிழ்நாடு

ஆவின் நிறுவனத்தில் 460 காலிப்பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் – உடனே அப்ளை பண்ணுங்க..!

ஆவின் பால் நிறுவனத்தில் 460 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்பம் நவ.16 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான முழு விவரங்களை கீழே காண்போம்.

ஆவின் நிறுவனம்

ஆவின் நிறுவனத்தில் ஏற்கனவே ஓட்டுநர் , மேலாளர் மற்றும் உதவி மேலாளர் என பல காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்த நிலையில் தற்போது மூத்த ஆலை உதவியாளர் பதவியில் உள்ள 6 இடங்கள் உட்பட மொத்தம் 460 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு உள்ளது.

aavin 2

பால் உற்பத்தியாளருக்கு 170 இடங்களும், ஆய்வகத்தில் 20 இடங்களும், கால்நடையில் 70 இடங்களும், பொறியாளர் 60 இடங்களும் மற்றும் நிறுவனத்தை கவனிப்பவருக்கு 70 இடங்கள் என மொத்தம் 460 காலியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு

ஆவின் நிறுவனத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓ.சி பிரிவினர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும், எம்.பி.சி, பி.சி (முஸ்லிம்) மற்றும் டி.என்.சி பிரிவினர் 32 வயது நிரம்பியவராகவும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் 35 வயது உள்ளவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

இடம் மற்றும் சம்பளம்:

தேர்வு செய்யப்படுவோர் சென்னை, ஈரோடு, நீலகிரி ,திருவண்ணாமலை, தஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகிய 6 இடங்களில் பணி நியமனம் செய்யப்படுவர். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். விண்ணப்பதாரர் கடைசி தேதி 05/12/2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

currency

எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் மட்டும் விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்தினால் போதும், பிற பிரிவினர் ஆன்லைன் மூலம் ரூ.250 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

loading...
Back to top button
error: Content is protected !!