தமிழ்நாடுமாவட்டம்

கிணற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை உயிரிழப்பு..!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு கல்பனா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தையும், திரேஷா என்ற 3 வயது பெண்குழந்தை உள்ளனர். கல்பனா தனது வீட்டு அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்கும் போது குழந்தையும் உடன் இருப்பது வழக்கம்.

இந்நிலையில் குழந்தை தனது கையில் வைத்திருந்த பொம்மையுடன் அந்தக் கிணற்றின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளது. சிறுது நேரம் கழித்து கல்பனா தனது குழந்தையை காணாததால் எல்லா இடத்திலும் தேடியுள்ளார். குழந்தை கிடைக்காத நிலையில் கல்பனா தற்செயலாக கிணற்றின் அருகில் சென்று பார்த்த போது

கிணற்றின் கரையில் பொம்மை கிடந்ததைப் பார்த்து ஒருவேளை தனது குழந்தை கிணற்றிற்குள் விருந்திருக்கும் என்று எண்ணி வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்த வெம்பக் கோட்டைத் தீயணைப்புத் துறை அலுவலர் காந்தையா தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக தேடியபின் இறுதியில் குழந்தையை கிணற்றிலிருந்து சடலமாக மீட்டனர். மேலும் சம்பவம் குறித்து தகவலறிந்த ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தை இறப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: