இந்தியா

ஆகஸ்ட் 28 முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கி விடுமுறைை!!

நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளில் அதிக விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 15 விடுமுறை தினங்கள் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி முன்னதாக அறிவித்திருந்தது. மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பல விடுமுறைகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது மேலும் உள்ள விடுமுறை தினங்களை பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. 7 விடுமுறை நாட்கள் வழக்கமான வார இறுதி நாட்களாகவும், 8 நாட்கள் பல்வேறு திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் காரணமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆர்பிஐ அறிவித்த விடுமுறை நாட்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. குறிப்பிட்ட மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகை மற்றும் அதன் தேதியைப் பொறுத்து மாறுபடுகின்றது. மாதத்தின் இறுதி பகுதியை நெருங்கி விட்ட நிலையில், இன்னும் 4 விடுமுறை தினங்கள் வர இருக்கின்றது.

எனவே பொதுமக்கள் வங்கி தொடர்பான பணிகளை திட்டமிடுவதற்கு முன்னர் விடுமுறை தினங்களை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

விடுமுறை தினங்கள்:

  • ஆகஸ்ட் 28, 2021 – நான்காவது சனிக்கிழமை
  • ஆகஸ்ட் 29, 2021 – ஞாயிறு
  • ஆகஸ்ட் 30, 2021 – கிருஷ்ண ஜெயந்தி
  • ஆகஸ்ட் 31, 2021 – ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி (ஹைதராபாத்)

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  சிக்கன் பிரியாணி சாப்பிட்ட அடுத்த சில நிமிடங்களில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த 23 வயது இளைஞன்!!
Back to top button
error: