வேலைவாய்ப்பு

மாதம் ரூ.30,000 சம்பளம்.. மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழக அரசின் மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வு கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் டிச.1ம் தேதி நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.

பணியிடங்கள்

தமிழக மீன்வளத் துறையில் காலியாக உள்ள எடிட்டர் பதவிக்கான 4 காலிப்பணியிடங்கள் நிரந்தர பணியிடமாக நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி

இந்த பணிக்கான கல்வித்தகுதி அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் BA/ B.Sc/ M.F.Sc/ B.F.Sc ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த கல்வித் தகுதியோடு எடிட்டிங் அனுபவம் பெற்றிருத்தல் அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு

இதற்கான வயது வரம்பாக அதிகபட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்

சம்பளம் அதிகபட்சமாக மாதம் ரூ.30,000 வழங்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை

இந்த பதவிக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 1ம் தேதி Dr. MGR Fisheries College and Research Institute, NGO Nagar Extension, Ponneri, Tamil Nadu 601204 என்ற முகவரிக்கு சென்று நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா? ரூ.21,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!!
Back to top button
error: