மாவட்டம்

காங்கேயத்தில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழப்பு

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளலூர், அண்ணா நகரைச் சேர்ந்த மயில்சாமி (39) குடும்பத்தினர் 6 பேர் காரில் புறப்பட்டு கும்பகோணம் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர்.

tn tpr 01 kangayamaccident3death vis 7204381 09012021120121 0901f 1610173881 1073

அதிகாலை 4.30 மணியளவில் வெள்ளக்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் அருகே சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதியது.

இதில், காரை ஓட்டி வந்த மயில்சாமி, இவருடைய மனைவி இந்து (37), உறவினர் கௌசல்யா (60) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

tn tpr 01 kangayamaccident3death vis 7204381 09012021120121 0901f 1610173881 523

மயில்சாமி மகன் கௌதம் (13), மகள் ரம்யா (11), உறவினர் கலைவாணி ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்த அனைவரும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வெள்ளக்கோவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Back to top button
error: Content is protected !!