அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், META CEO மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் 27 பிரபல அமெரிக்கர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய தடை விதித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை அடுத்து தற்போது ரஷ்யாவும் அமெரிக்கா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், META CEO மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் 27 பிரபல அமெரிக்கர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய தடை விதித்துள்ளதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஜோ பிடன் நிர்வாகத்தின் அதிகரித்த ரஷ்ய எதிர்ப்புத் தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சகம் நேற்று வியாழக்கிழமை தனது இணையதளத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹாரிஸ் மற்றும் ஜுக்கர்பெர்க் தவிர, லிங்க்ட்இன் மற்றும் பாங்க் ஆஃப் அமெரிக்காவின் தலைமை நிர்வாக அதிகாரிகள், ரஷ்யாவை மையமாகக் கொண்ட மெடுசா செய்தி இணையதளத்தின் ஆசிரியர்கள் மற்றும் பலர் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh