வேலைவாய்ப்பு

25,271 மத்திய அரசு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்!!

Constable (General Duty) மற்றும் Rifleman (General Duty) பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் ஆன SSC யில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது ஜூலை மாதத்தில் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 31.08.2021 உடன் முடிவடைய உள்ளதால், திறமையானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் விண்ணப்பத்தார்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 வயது முதல் 23 வயதுக்குள் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். SSC GD கான்ஸ்டபிள் பதவிக்கு 25, 271 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

Computer Based Examination மற்றும் PET/ PST or Detailed Medical Examination (DME)/ Review Medical Examination (RME) மூலம் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ.21700 – 69100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

இதுவரை இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனே தங்களின் பதிவுகளை எங்கள் வலைத்தளம் மூலம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Official PDF Notification- https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_ctgd_17072021.pdf

Apply Online – https://ssc.nic.in/

 


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தேர்வு இல்லாமல்! ரூ.15,000/- ஊதியத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!
Back to top button
error: