இந்தியா

HCL நிறுவனத்தில் புதியதாக 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு!!

பிரபல தகவல் தொழிநுட்பமான HCL நிறுவனம் 2023 நிதியாண்டில் 20,000 புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டு இருப்பதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறை தீவிர வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வால் இந்தியாவில் ஊரடங்கு விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து வேலைகளும் ஆன்லைன் மயமாகி விட்டது. இந்த நேரத்தில் தகவல் தொழில் நுட்பத்துறையின் தேவை அதிகரித்தது. அதனை தொடர்ந்து ஐடி துறை ஊழியர்களின் தேவையும் அதிகரித்தது. கிட்டத்தட்ட 400 சதவீதம் அளவில் ஐடி பணியாளர்களுக்கான தேவை அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் போன்ற பெரிய நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை அறிவித்து வருகிறது.

புதிதாக கல்லூரி முடித்துவரும் மாணவர்களுக்கே ஐடி நிறுவனங்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். முன்னணி நிறுவனமான விப்ரோ ஆண்டுக்கு 3.5 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பிரெஷ்ஷர்களைப் பணியமர்த்தும் பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொறியியல் படித்து முடித்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதனை தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் ஹெச்.சி.எல் ஐடி நிறுவனம் சுமார் 20,000 புதிய பணியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. அதில் முதல் மூன்று காலாண்டில் 17500 ஃப்ரெஷர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள எண்ணிக்கைக்கான ஊழியர்களை கடைசி காலாண்டில் நியமிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தில் 1.97 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2021-இல் மட்டும் 38,095 பேர் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளனர். அதில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதத்தில் 10,143 ஊழியர்களை வேலைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக கல்லூரி முடிந்த பிரஸ்ஷர்களை வேலைக்கு எடுப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: