தமிழ்நாடுமாவட்டம்

புதுச்சேரி அருகே விவசாயக்‍ கிணற்றில் மூழ்கி +2 மாணவர் பலி..!

புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் இரும்பை கிராமத்தில், விவசாயக்‍ கிணற்றில் குளித்த +2 மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கொசப்பாளையத்தை சேர்ந்த அய்யனார் என்பவரின் மகன் கோபால், தனது நண்பர்களுடன் ஆரோவில் பகுதியில் உள்ள இரும்பை கிராமத்தில் பாபு என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குளிக்‍கச் சென்றார்.

அப்போது அங்கு போலீசார் வந்ததைக்‍ கண்டு, கிணற்றில் குளித்துக்‍கொண்டிருந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பினர். கோபால் தப்பிக்‍க முடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: