தமிழ்நாடு

2 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – அரசு உத்தரவு!!!

தமிழகத்தில் உள்ள 2 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை அரசின் உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று (ஆகஸ்டட் 24) வெளியிட்டார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிலையில் அதில் அமோக வெற்றி பெற்று புதிய முதல்வராக முக ஸ்டாலின் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி பதவி ஏற்றார். பதவி ஏற்ற நாளில் இருந்து மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி உள்ளார். கொரோனா நிவாரணம் ரூ.4000 மற்றும் இலவச மளிகை பொருள்கள், பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் என அவரது திட்டங்கள் அனைத்தும் மக்கள் பயன் பெறும் வகையில் உள்ளது.

இந்நிலையில் அவர் பதவி ஏற்றத்தில் இருந்து பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய மற்றும் உயர் பொறுப்பில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் மேலும் 2 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று அறிவிப்பு வெளியிட்டார்.

அதில், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராகப் பதவி வகித்து வரும் டிஜிபி பிரதீப் வி. பிலிப், காலியாக உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியின் (சென்னை) டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்ரேஷன்ஸ் பிரிவின் (சென்னை) ஏடிஜிபியாக பதவி வகித்து வரும் அமல்ராஜ், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை ஆப்ரேஷன்ஸ் பிரிவின் (சென்னை) ஏடிஜிபியாக அமல்ராஜ் நீடிப்பார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  பத்திரப்பதிவு முறைகேடு நடந்தால் 3 ஆண்டுகள் சிறை – அமைச்சர் அறிவிப்பு!!
Back to top button
error: