தமிழ்நாடுமாவட்டம்

+2 பொதுத்தேர்வு நடத்த 60% மாணவர்கள் ஆதரவு.. கருத்துக்‍கேட்பில் தகவல்..!

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பான கருத்துக்‍கேட்பில், 60 சதவீத மாணவர்கள் தேர்வை நடத்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி, பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் கருத்துகேட்டு பின்னர் முடிவெடுக்‍கப்படும் என அரசு அறிவித்திருந்தது. மேலும், கருத்துகளை தெரிவிக்‍க இமெயில் முகவரியும் அறிவிக்‍கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கருத்துக் கேட்பில், ப்ளஸ் 2 தேர்வு நடத்த 60 சதவீத மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த 10 மாதங்களுக்கும் மேல் கடினமாக உழைத்துப் படித்து வருவதாகவும், தேர்வு ரத்து செய்யப்பட்டு முந்தைய செயல்பாடுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கினால், தாங்கள் எதிர்ப்பார்க்‍கும் மதிப்பெண் கிடைக்‍காது என்பதால், தொற்று குறைந்த பின்னர் ஆகஸ்ட் மாத இறுதியில் தேர்வை நடத்த 60 சதவீத மாணவர்கள் கோரிக்‍கை வைத்துள்ளனர்.

அதேநேரம், இணையவழிக் கல்வியில் பாடங்களை சரியாகப் புரிந்து கொள்ள முடியாததால், பொதுத்தோ்வை ரத்து செய்ய வேண்டும் என 40 சதவீத மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோரை பொறுத்தவரை 50 சதவீதம் பேர் தேர்வை நடத்தவும், 50 சதவீதம் பேர் தேர்வை ரத்து செய்யவும் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: