வேலைவாய்ப்பு

தேசிய பேரிடர் மீட்பு படையில் 1978 காலிப்பணியிடங்கள்!!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Assistant Commandant, Inspector மற்றும் பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

நிறுவனம் – NDRF
பணியின் பெயர் – Assistant Commandant, Inspector & Others
பணியிடங்கள் – 1978
விண்ணப்பிக்க கடைசி தேதி – 12.10.2021
விண்ணப்பிக்கும் முறை – Application Form

வேலைவாய்ப்பு:

தேசிய பேரிடர் மீட்பு படையில் Assistant Commandant, Inspector மற்றும் பல்வேறு பணிகளுக்கு என 1978 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் மற்றும் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் அதிக அளவு முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பதிவாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.73,200/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்பவர்கள் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் (12.10.2021) அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்னப்பங்களை அனுப்பிட வேண்டும்.

ndrf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ICMR-NIE நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு!!
Back to top button
error: