தமிழ்நாடு

அரசுப் பேருந்துகளில் 18.93 கோடி பெண்கள் இலவச பயணம் – போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்!!!

தமிழக அரசு பேருந்துகளில் இலவச பயணம் திட்டத்தின் மூலமாக இதுவரை 18.93 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளதாகவும், பலனடைந்துள்ளதாகவும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு திமுக சார்பில் அறிவித்திருந்த அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் செய்து கொள்ளும் திட்டம் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக முக ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த உடன் முதன்முதலில் மகளிர் இலவச பயணத்திற்கான திட்டத்திற்கு தான் தனது முதல் கையெழுத்தை இட்டார். அதன்பிறகு, உடனே இந்த திட்டம் அமலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக செயல்பட்டும் வருகிறது. இன்று தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மீதான கொள்கை விளக்க குறிப்பு நடைபெற்றது.

அப்போது, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பயன்படுத்தப்படாமல் உள்ள 144 சிறிய பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அதன்மூலம் போக்குவரத்துக் கழகத்திற்கும் வருவாய் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும் நத்தம் சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினருமான நத்தம் விஸ்வநாதன் அவர்கள் பேசினார். அப்போது, பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தில் ஒரு சில பேருந்துகள் தான் இயக்கப்படுவதாகவும், இலவச பேருந்துக்காக பெண்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பெண்கள் பயணிக்க வழிவகை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பெண்களுக்கான இலவச பேருந்து வசதியில் இதுவரை 18 கோடியே 39 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளதாகவும், நாள்தோறும் 34 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதாகவும் தெரிவித்தார். 2011-12 ஆம் ஆண்டு 2 கோடியே 8 லட்சத்து 36 ஆயிரமாக இருந்த தினசரி பேருந்து பயணிகளின் எண்ணிக்கை, 2020-21 ஆம் ஆண்டு 73 லட்சத்து 64 ஆயிரம் ஆக குறைந்துள்ளதாகவும் போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  முழுமையாக கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
Back to top button
error: