தமிழ்நாடுமாவட்டம்

தூத்துக்குடியில் பெண்ணிடமிருந்து 17 சவரன் செயின் பறிப்பு.. ஒருவர் கைது..!

தூத்துக்குடி ரோச் காலனி பகுதியைச் சேர்ந்த ஆஷா என்பவரின் கழுத்தில் இருந்த 17 சவரன் தங்க நகையை கடந்த பிப்ரவரி மாதம் ​மர்ம நபர்கள் சிலர் பறித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஆஷா அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசாரின் தீவிர விசாரணையில் முத்தையாபுரம் குமாரசாமி நகர் பகுதியை சேர்ந்த நயினார் என்பவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து நயினாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 17 சவரன் தங்க நகையை மீட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: