தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பாஞ்சாலங்குறிஞ்சி வீரசக்க தேவி கோவில் திருவிழா நடைபெற இருப்பதால் இன்று காலை முதல் 15 ஆம் தேதி மாலை வரை தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரபல ஆலயமான பாஞ்சாலங்குறிஞ்சி வீரசக்க தேவி கோவிலில் வைகாசி திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இருந்தும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளுமே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததன் காரணமாக தமிழகத்தில் உள்ள எந்த வழிபாட்டு தளங்களும் திறக்கப்படவில்லை.
தற்போது சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த காரணத்தினால் மீண்டும் கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கோவில்களில் திருவிழா நடத்தப்பட்டு வருகின்றன. அதே போல இந்தாண்டு பாஞ்சாலங்குறிஞ்சி வீரசக்க தேவி கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் நேத்திக்கடன் செலுத்தவுள்ளனர்.
ஆனாலும், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பாஞ்சாலங்குறிஞ்சி வீரசக்க தேவி கோவில் திருவிழா நடைபெற இருப்பதால் எக்கச்சக்கமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் இன்று காலை முதல் 15 ஆம் தேதி மாலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh