இந்தியா

அதிதீவிரமாக பரவும் கொரோனா.. மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், வரும் 30 வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சாலைகள் வெறிச்சோடின.

மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை வேகமாக பரவி வரும் நிலையில், நேற்று புதிதாக 58 ஆயிரத்து 952 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 35 லட்சத்து 78 ஆயிரத்து 160 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 278 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதனால் தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 58 ஆயிரத்து 526 ஆக அதிகரித்து உள்ளது.

மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஏற்கனவே சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றுமுதல் 30 வரை 144 தடையுத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. புதிய வழிகாட்டுதலின்படி அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பொது இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

உணவு, குடிநீர், மின்சாரம் வழங்கல், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் ஆகிய இன்றியமையாச் சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 144 தடையுத்தரவு காரணமாக, மும்பை, நாக்‍பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடைகள் மூடப்பட்டு, பொதுமக்‍களின்றியும் சாலைகள் வெறிச்சோடின.

இதையும் படிங்க:  புனேவில் அதிகரிக்கும் கொரோனா.. ஒரு வாரம் இரவு நேர ஊரடங்கு அமல்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: