தமிழ்நாடு

1,400 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு – அரசாணை வெளியீடு!!

தமிழகத்தில் கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் பணிநியமனம் செய்யப்பட்ட 1,400 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் பணியிடங்கள் இன்னும் 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்யப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் 2009-2010 ஆம் கல்வியாண்டில் சுமார் 200 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி நடுநிலைப் பள்ளிகள் 6 முதல் 10 வரையுள்ள வகுப்புகள் கொண்ட உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த தரம் உயர்த்தப்பட்ட 200 பள்ளிகளுக்கும், ஒரு உயர்நிலைப் பள்ளிக்கு 6 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1 உடற்கல்வி ஆசிரியர் என்ற வீதத்தில் சுமார் 1400 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட்டது.

இந்த தற்காலிக ஆசிரியர்களது பணியிடங்கள் கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி வரை தொடர் நீட்டிப்பு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது ‘ஆசிரியர் பணியிடங்களுக்கான நீட்டிப்பு காலம் முடிவடைந்துள்ளதால், பணி நீட்டிப்பு உத்தரவை 2021 ஜூன் 1 முதல் 2024 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் கருத்துப்படி, 2009-2010 ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் நிரப்பபற்ற 1,400 தற்காலிக ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் கீழ், நிதித்துறையின் மறு ஆய்வில் முடிவெடுக்கும் வரைக்கும் இப்பணியிடங்களுக்கான நீட்டிப்பு தொடரும்.

இந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட செலவினங்கள், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் உடனுக்குடன் ஈடு செய்யப்பட்டு வரவு வைக்கப்பட வேண்டும். மேலும் அரசுப் பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் தற்போதைய தேவை குறித்து ஆய்வு செய்து உபரி பணியிடங்கள் இருந்தால் அவற்றை அரசுக்கு சரண் செய்ய வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  நீலகிரி மாவட்ட ஆட்சியராக எஸ்.பி.அம்ரித் பதவியேற்றார்!
Back to top button
error: