இந்தியா

இந்தியாவில் புதிதாக கொரோனாவால் 1,31,968 பேர் பாதிப்பு..!

இந்தியாவில் புதிதாக கொரோனாவால் 1,31,968 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,60,542 ஆக உயர்ந்தது. கொரோனாவிற்கு ஒரே நாளில் 780 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,67,642 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 61,899 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,19,13,292 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,79,608 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 91.22% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.28% ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 7.50% ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 9,43,34,262 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36,91,511 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: