உலகம்

அமெரிக்காவின் சிகாகோவில் போலீசாரால் 13 வயது சிறுவன் சுட்டுக் கொலை..!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் போலீசாரால் 13 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அந்த சம்பவத்தின் வீடியோ காட்சியை இரண்டு வாரம் கழித்து சிகாகோ போலீசார் வெளியிட்டுள்ளனர்.

18834404 303

9 நிமிடம் ஓடக் கூடிய இந்த பாடி கேம் வீடியோ, ஒரு காரில் இருந்து அந்த அடையாளம் தெரியாத காவல் அதிகாரி இறங்கி வருவதும், ஆடம் டோலிடோ என்ற சிறுவனை மடக்கி கைகளை உயர்த்தச் சொல்வதும், பின்னர் துப்பாக்கியால் சுடுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.சுடப்பட்ட சிறுவன் சுருண்டு விழுந்து உயிரிழந்தான்.

ISZFEMBCU5MGTEOEAOZ4GKS5CI

அந்த 13 வயது சிறுவன் ஆயுதம் வைத்திருந்ததாகவும், 21 வயதான ரூபன் ரோமன் ஜூனியருடன் தப்பி ஓடியதாகவும் சிகாகோ போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் துப்பாக்கியை மீட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆடம் சுடப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் அருகிலுள்ள வேலியின் பின்னால் துப்பாக்கியை வீசி உள்ளான்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டான்ட் என்ற கருப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவத்தையடுத்து போலீசாரின் அராஜகத்தை விளக்கும் இன்னொரு வீடியோ காட்சியாக இது கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

×

 

சிறுவனை சுட்டிருக்கும் அதிகாரியின் பெயர் ஸ்டில்மேன். பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்தவர் அவர். 6 வருடங்களாக போலீஸ் படையில் இருப்பவர். மார்ச் 29ந் தேதி அதிகாலை 2.30 மணி மெக்சிகோ லிட்டில் வில்லேஜ் பகுதியில் தன் காரை விட்டு கீழே இறங்கி சிறுவன் டோலிடோவை துரத்திச் செல்வது பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க:  உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13.59 கோடியாக உயர்வு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: