இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 12,408 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் சமீப காலங்களாக கொரோனா தொற்றுகள் பெருமளவில் குறைந்து வருகின்றன. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,408 ஆக உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 8 லட்சத்து 2 ஆயிரத்து 591 ஆக உயர்வடைந்து உள்ளது. 15,853 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இதன்படி, மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,96,308 ஆக உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 120 பேர் உயிரிழந்து உள்ளனர். மொத்த உயிரிழப்பு 1,54,823 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புகளுக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,51,460 ஆக உள்ளது. நாட்டில் தடுப்பு மருந்துகள் 49 லட்சத்து 59 ஆயிரத்து 445 பேருக்கு இதுவரை வழங்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

Back to top button
error: Content is protected !!