தமிழ்நாடுமாவட்டம்

அவனியாபுரம் ஜல்லிகட்டு 12 பேர் காயம்..

தமிழக பாரம்பரிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை அமைச்சர் செல்லுார் ராஜு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது….. தேசிய கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழக ஜல்லி கட்டை காண வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக இருப்பதால், தலைவர்கள் யார் வேண்டுமானும் வந்து செல்ல முடிகிறது. தேர்தல் நேரத்தில் சில அரசியல் கட்சியினர் ஏன் ஜல்லிகட்டை பார்க்க வருகிறார்கள் என்பது மக்களுக்கு தொியும். அரசியல் உள்நோக்கத்துடன் ஜல்லிக்கட்டை அணுககூடாது என்று அவர் கூறினார். ஜல்லி கட்டில் மாட்டின் உரிமையாளர்கள், மாடு பிடி வீரர்கள் என 12 பேர் காயமடைந்து உள்ளனர்.

Back to top button
error: Content is protected !!