இந்தியா

12 இலக்க எண்கள் அனைத்தும் ஆதார் எண் அல்ல – UIDAI எச்சரிக்கை!!

ஆதார் அட்டையை ஆவணமாக கேட்கும் இடங்களில் பலர் வேறு 12ம் இலக்க எண்களை கொடுத்து மோசடி செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக UIDAI அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒருவரின் அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் ஆதார் அட்டையை கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும் என்று UIDAI அறிவித்துள்ளது. நாட்டில் ஆதார் அட்டை முக்கிய அடையாள ஆவணமாக கருதப்படுகிறது. இதனால், அனைத்து 12 இலக்க எண்களும் ஆதார் அல்ல என்றும், அடையாள ஆதாரமாக ஏற்றுக்கொள்வதற்கு முன்பு கண்டிப்பாக சோதிக்க பரிந்துரைத்துள்ளது.

பலர் இது போன்ற மோசடி செயல்களில் ஈடுபடுவதால் மத்திய அரசு இதற்கு எதிரான சட்டப்பூர்வ அறிவிப்பை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது. ஆதார் அட்டையை ஆன்லைனில் சரிபார்க்கும் எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வழிமுறைகள்:

  • முதலில், UIDAI ன் அதிகாரபூர்வ இணையதளமான residence.uidai.gov.in/verify க்கு செல்ல வேண்டும்.
  • பின்னர் 12 இலக்க எண்ணை உள்ளிட வேண்டும்.
  • இப்பொழுது பாதுகாப்பு குறியீடு அல்லது, கேப்ட்சாவை உள்ளிட வேண்டும்.
  • இப்பொழுது, ‘சரிபார்க்க தொடரவும்’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது, 12 இலக்க எண்ணின் உண்மைத்தன்மை குறித்த விவரங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: