இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,08,14,304 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 95 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,54,918 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,05,10,796 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 14,448 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,48,590 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 54,16,849 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!