இந்தியா

இந்திய சான்றிதழை ஏற்க 110 நாடுகள் சம்மதம்!

இந்தியாவில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொள்ள 110 நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்திய மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவேக்சின்’ தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்படுகின்றன.

கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்டோர் பிற நாடுகளுக்கு பயணிப்பதில் உள்ள தடைகளை அகற்றும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொள்ள 110 நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன. மேலும் பிற நாடுகளும் இதனை ஏற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ஆதார் - பான் கார்டு இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு!
Back to top button
error: