தமிழ்நாடுமாவட்டம்

தமிழகம் முழுவதும் இன்று 10-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகம் முழுவதும் இன்று 10 கட்ட மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் பரவலைத் முற்றிலுமாக தடுக்க தடுப்பூசி தான் ஒரே தீர்வு என வலியுறுத்தப்பட்டது. இதனால் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு செப்டம்பர் மாதம் முதல் மெகா தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது. இந்த முகாமில் வழக்கத்தைவிட கூடுதலான எண்ணிக்கை தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி கடந்த வியாழக்கிழமை 9-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 10-வது கட்டமாக இன்று கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது. சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாத இறுதிக்குள் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தமிழகம் சென்றுகொண்டிருக்கிறது.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  கேரளா, தமிழ்நாடு எல்லைகளில் தீவிர கண்காணிப்பு!!
Back to top button
error: